'தலைக்கு நேரா அசுர வேகத்தில் வந்த பந்து'.. 'நூலிழையில் தப்பிய வீரர்' வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 23, 2019 01:22 PM

ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்தில் பந்துவீச்சாளர் நூலிழையில் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Australian bowlers narrow escape after batsman smashes shot

ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் நியூசவுத் வேல்ஸ் அணி வீரர் மிக்கி எட்வர்ட்ஸ் வீசிய பந்தை குயீன்ஸ்லாந்து வீரர் சாமுவேல் ஹேஸ்லெட் எதிர்கொண்டார். அப்போது சாமுவேல் அடித்த பந்து மிக்கி எட்வர்ட்ஸின் தலைக்கு நேராக சென்றது. கனநேரத்தில் அவர் கீழே குனிந்ததால் பந்து கையில் பட்டு சென்றது.

இதனால் நிலைதடுமாறி மிக்கி எட்வர்ட்ஸ் கீழே விழுந்தார். இதில் அவரின் கையில் காயம் ஏற்பட்டது. பந்து வந்த வேகத்தில் தலையில் அடித்திருந்தால் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #AUSTRALIA #BOWLER #INJURY #CRICKET