'காண்டம்' இல்லேன்னா அபராதம் போடுறாங்க..டாக்ஸி 'டிரைவர்கள்' வேதனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 22, 2019 08:23 PM

தங்களது வண்டிகளில் உள்ள முதலுதவி பெட்டிகளில் காண்டம் இல்லையென்றால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக,டெல்லி கால் டாக்ஸி டிரைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Delhi Cab Drivers Carry Condoms in First-Aid Box

நாடு முழுவதும் திருத்தப்பட்ட புதிய வாகன மோட்டார் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.இதன்கீழ் போக்குவரத்து போலீசார் அதிக தொகைகளை அபராதமாக விதிப்பதாக தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன.சில நேரங்களில் வாகனம் வாங்கிய தொகையை விட அபாரதத் தொகை அதிகம் இருப்பதாக,வாகன உரிமையாளரும், டிரைவர்களும் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் வண்டியில் காண்டம் இல்லாவிட்டால்,போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக டெல்லி கால் டாக்ஸி டிரைவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் டிரைவர்கள் அனைவரும் தங்களது வண்டிகளில் உள்ள முதலுதவிப்பெட்டியில் கட்டாயமாக காண்டம் வாங்கி வைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் இது வெறும் வதந்தி தான் என இதுதொடர்பாக டெல்லி போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்திருக்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில்,'' காண்டம் தொடர்பாக,மோட்டார் வாகன சட்டத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.முதலுதவி பெட்டியில் காண்டம் வைத்திருக்காத காரணத்திற்காக,டிரைவர்களுக்கு நாங்கள் எந்தவிதமான அபராதத்தையும் விதிக்கவில்லை,''என தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த காண்டம் குறித்த வதந்தி தற்போது காட்டுத்தீ போல,கால்டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Tags : #DELHI #CONDOM