மால், தியேட்டர், ஸ்கூல், காலேஜ் 'எல்லாத்தையும்' இழுத்து மூடுங்க... நோ பார்ட்டி.. 'கல்யாணம்', காது குத்தையும் தள்ளி வைங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 13, 2020 04:41 PM

கொரோனாவிற்கு முதியவர் பலியான நிலையில், கர்நாடகாவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Malls, Pubs, Parties banned for a week Across Karnataka

இதையடுத்து கொரோனா அச்சம் காரணமாக அடுத்த 1 வாரத்திற்கு கர்நாடகாவில் உள்ள மால்கள், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் மூடும்படி கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா உத்தரவிட்டு இருக்கிறார். இதேபோல அடுத்த 1 வாரத்திற்கு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பப்கள், பார்ட்டிகள், நீச்சல் குளங்கள், பிறந்தநாள் பார்ட்டிகள், நைட் கிளப்புகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், சம்மர் கேம்ப்கள், நிச்சயதார்த்தம், கான்பரன்ஸ்கள் போன்றவைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக கர்நாடகாவில் 1 முதல் 6-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.