என்னோட 'நாய்க்குட்டிங்க' வெயிலை தாங்காது... 'குளுகுளுன்னு' 24 மணி நேரமும் ஏசி போட்ட நபர்... ரகசியமாக 'பறந்த' தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாய்க்குட்டிகள் வெயில் தாங்காது என திருட்டு மின்சாரம் பயன்படுத்தி ஏசி பயன்படுத்திய நபருக்கு மின்வாரியத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த பல செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். வெயிலால் தன்னுடைய நாய்க்குட்டிகள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்த அவர் இதற்காக திருட்டு வேலை ஒன்றை செய்துள்ளார். அதன்படி தனது வீட்டில் உள்ள மீட்டரில் தனியாக ஒரு ஒயர் போட்டு திருட்டு மின்சாரம் எடுத்து நாய்க்குட்டிகள் இருந்த அறைக்கு ஏசி வசதி செய்தி கொடுத்துள்ளார்.
24 மணி நேரமும் அந்த வீட்டு நாய்க்குட்டிகள் ஏசியில் இருந்ததை பார்த்த பக்கத்து வீட்டினர் ரகசியமாக மின்வாரியத்துறையிடம் போட்டுக்கொடுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், மீட்டரை சோதனை செய்தபோது 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரத்தை திருடியது அவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து அபராதமாக ரூபாய் 7 லட்சத்தை மின்சாரத்துறை அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர்.
