வீடியோ: 'தூங்கியபடியே' கார் ஓட்டிய 'டிரைவர்'... 'அதிர்ச்சியில்' உறைந்த 'பெண்' பயணி... அதன் பின் செய்த 'நெகிழ்ச்சி' செயல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 05, 2020 12:37 PM

மும்பையில், வாடகை கார் டிரைவர் துாங்கியதால், அவரிடம் இருந்து காரை வாங்கி, இளம்பெண் ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Driver who was driving the car asleep - shocked female passenger

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் இருந்து, புனே செல்ல தேஜஸ்வினி என்ற இளம் பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். இதையடுத்து காரில் புனேவுக்கு சென்றுகொண்டிருந்த போது சிறிது நேரத்தில் கார் டிரைவர் செல்போனில் பேசியபடி சென்றுள்ளார். தேஜஸ்வினி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மொபைல் ஃபோனை வைத்து விட்டு காரை ஓட்டியுள்ளார்.

அதன்பிறகு சிறிது நேரத்தில் காரை ஓட்டியபடியே டிரைவர் தூங்கி விழுந்துள்ளார். . இதனால், மற்றொரு கார் மற்றும் சாலை தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட இருந்தது.

அப்போது, ஒரு முடிவுக்கு வந்த தேஜஸ்வினி, டிரைவரை துாங்கும்படி கூறிவிட்டு, தானே காரை ஓட்டினார். டிரைவரும் தேஜஸ்வினிக்கு நன்றி கூறிவிட்டு படுத்து நன்றாக உறங்கியுள்ளார். டிரைவர் துாங்குவது உள்ளிட்ட காட்சிகளை, தன் மொபைலில் பதிவு செய்த அவர், அவற்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட வாடகைக் கார் நிறுவனம் அந்த ஓட்டுனரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. 

Tags : #MAHARASHTRA #MUMBAI #CAB DRIVER #ASLEEP #FEMAL PASSANGER