‘டீசல் கார் விற்பனையை’... ‘ஏப்ரல் முதல் நிறுத்தும் மாருதி நிறுவனம்’... விபரங்கள் உள்ளே?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Feb 26, 2020 04:21 PM

ஏப்ரல் 1-ம் தேதி முதல் டீசல் கார் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும், டீசல் வாகனங்கள் விற்பனை செய்வதை முற்றிலும் நிறுத்துவதாகவும் மாருதி நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

Maruti Suzuki to Stop Diesel Cars in India From April 1st

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்காக, பி.எஸ். 4  (BS 4) விதியிருந்து நேரடியாக வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் பி.எஸ்.6  (BS 6) வாகன விதிகள் இந்தியாவில் அமலுக்கு வருகின்றன. இதையடுத்து இந்த விதிகளை கொண்ட வாகனங்களை பிரபல கார் நிறுவனங்கள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை அதற்கேற்றவாறு தயாரித்து வருகின்றன. 

ஆனால் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி, பி.எஸ்.6 (BS 6) தரத்தில் டீசல் கார்களை தயாரிக்க, அதிகம் செலவு செய்ய வேண்டும் என்பதால், டீசல் கார் விற்பனையை மாருதி நிறுவனம் நிறுத்த உள்ளது. அதற்குப் பதிலாக, இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்கள் மற்றும் எலெக்டிரிக் கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாருதி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அத்தோடு, ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அதிக அளவில் தனது கார்களில் அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மாருதி நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில், 9 சதவிதம் மட்டுமே இயற்கை எரிவாயுவில் இயங்கக் கூடியவை. டெல்லி, மும்பை , பூனே , அகமதாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே இயற்கை எரிவாயு வாகனங்களின் பயன்பாடு உள்ளது.

Tags : #MUMBAI #INDIA #MARUTI SUZUKI