'பத்து வருசமா எங்கள கொடுமைப்படுத்துறான்' ... 'எங்கள நிம்மதியா வாழ விடுங்க', 'இல்லைன்னா'... 'வயதான' பெற்றோரின் அதிர்ச்சி முடிவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 02, 2020 05:53 PM

மகனின் கொடுமை தாங்க முடியாத நிலையில் தங்களை கருணை கொலை செய்யுமாறு வயதான பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனுவளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Elder parents filed for mercy killing in Collector office

திருப்பூர் மாவட்டம் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் (85) மற்றும் கருணையம்மாள் (65) ஆகியோர் கணவன் மனைவி ஆவர். இவர்களுக்கு பழனிசாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சென்னியப்பன் மற்றும் கருணையம்மாள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். மனுவில் தங்களது மகன் பழனிசாமி தங்களது சொத்தை ஏமாற்றி வாங்கி வைத்து விட்டு தங்களை கொடுமைப்படுத்தி வருவதாக கூறியுள்ளனர்.

இது குறித்து வயதான தம்பதிகள் கூறுகையில், 'எனது மகன் பழனிசாமி கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் சொத்தை ஏமாற்றி வாங்கி வைத்து விட்டு தனது மனைவியுடன் சேர்ந்து எங்களை மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும் பல முறை மனு அளித்தும் எந்த பயனுமில்லை. மின்சார இணைப்பை துண்டித்தும், தண்ணீர் எடுக்க விடாமலும் தொந்தரவு செய்து வருகிறார். இப்படி துன்பம் நிறைந்து வாழ்ந்து வரும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இல்லையெனில், கருணை கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்' என்றனர்.

Tags : #TIRUPUR #MERCY KILLING