VIDEO: காட்டுப்பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய ‘சிறுத்தை’.. பிடிக்கப்போன அதிகாரிகளை ‘அலறவிட்ட’ அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் வனத்துறை அதிகாரிகளை தாக்கிய சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள ராஜ்கொண்டா கிராமத்தை சேர்ந்த விவாசாயி ஒருவர், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க விவசாயநிலத்தில் சுருக்கு வலை விரித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த வலையில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார், சிறுத்தையை வலையில் இருந்து மீட்டு வனப்பகுதியில் விடும் முயற்சியில் இறங்கினர். அப்போது திடீரென வலையில் இருந்து தப்பிய சிறுத்தை வனத்துறை அதிகாரிகள் இருவர் மீது பாய்ந்து தாக்கிவிட்டு தப்பியது. காயமடைந்த அதிகாரிகளுக்கு உடனே முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
#JUSTIN: A Leopard attacked an officer on duty, at Marriguda Mandal of Nalgonda district- Telangana.The officer suffered minor injuries.
More details awaited. https://t.co/XWNsDybyyC pic.twitter.com/xoW9fE0FJR
— NewsMeter (@NewsMeter_In) May 28, 2020
இதனை அடுத்து சிறுத்தையை தேடி வனப்பகுதிக்குள் அதிகாரிகள் சென்றனர். அப்போது புதர் ஒன்றின் அடியில் பதுங்கி இருந்த சிறுத்தையை மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் பத்திரமாக அதை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளை தாக்கிய சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.