'ருத்திர ஆட்டத்தை தொடங்கிய 'அம்பன்'... 'ரிவர்ஸ் கியர் இல்லாமல் இழுத்துச் சென்ற சூறாவளி'... கதிகலங்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅம்பன் புயல் காரணமாக வீசிய சூறாவளிக் காற்று நிறுத்தி வைத்திருந்த ஆம்னி பேருந்தை இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பன் புயல், தற்போது தீவிரமடைந்து உயர் தீவிர புயலாக உருமாறி, வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று அவ்வப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சுரை காற்று வீசி வருகிறது. இதனிடையே அம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே வரும் 20ம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சூறைக்காற்று வீசியதில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
Tags : #TELANGANA #CYCLONE AMPHAN #BUS
