'உனக்கு நான் உழைச்சு கொட்டணும், குடும்பம் நடத்த வேற பொண்ணா'?... 'வசமாக சிக்கிய கணவன்'... 'நடு ரோட்டில் துவைத்த மனைவி'... பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவேறொரு பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த கணவனை நடு ரோட்டில் மனைவி அடித்து உதைத்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கலை அடுத்த போத்தனகரில் வசித்து வருபவர் துளசி. தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவன் சீனிவாஸ் வேலைக்கு எதுவும் போகா4மல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி அரசு வேலையில் இருப்பதால், அவருடைய சம்பளத்தில் வரும் பணத்தில் சுக வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவர் சீனிவாஸ் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். அதுகுறித்து அவர் விசாரித்தபோது, பீட் பஜார் எனும் பகுதியில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வரும் தகவலை அறிந்து அதிர்ந்து போனார். இதையடுத்து அந்த தகவலை உறுதி செய்து கொண்ட துளசி, உறவினர்களுடன் கணவன் குடித்தனம் நடத்தி வரும் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்று வீட்டின் கதவைத் தட்டிவிட்டு துளசி காத்திருந்த நிலையில், வெகு நேரமாக அவர் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து சீனிவாஸ் கதவைத் திறந்த நிலையில், மனைவி துளசி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். அதன்பிறகு வீட்டினுள் சென்ற துளசி, தனது கணவருடன் குடித்தனம் நடத்தி வந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து இழுத்துச் சென்றார். அதன்பிறகு கணவரை அடித்து உதைத்த துளசி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
