‘விளையாடிட்டு இருந்த பையன்’.. ‘திடீர்னு குழிக்குள்ள கேட்ட அழுகுரல்’.. 120 அடி ‘ஆழ்துளை’ கிணற்றில் சிக்கிய 3 வயது குழந்தை.. ‘மீண்டும்’ ஒரு அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன். இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மெடக் மாவட்டத்தின் போச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தந்தை பிக்ஷபதி வீட்டுக்கு சென்றுள்ளார். பிக்ஷபதி தனது விவசாய நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளார். ஆனால் அதில் தண்ணீர் கிடைக்காததால் ஆழ்துளை கிணறுகளை மூட முடுவெடுத்து அதற்கான வேலைகளை நேற்று மாலை மேற்கொண்டுள்ளார்.
அப்போது குடும்பத்தினரும் உடன் இருந்துள்ளனர். இந்த சமயத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. அப்போது ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே பதறியடித்துக்கொண்டு பார்த்துபோது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் என்னசெய்வதென்று தெரியாமால் திகைத்த குடும்பத்தினர், உடனே காவல்துறையினருக்கும், தீயணைப்புப்படையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டப்பட்டது. இரவு நேரம் ஆனதால் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு திவிரமாக நடைபெற்று வந்தது.
A three-year-old boy fell into a borewell at podchanpalli village in Telangana's Medak district.@XpressHyderabad pic.twitter.com/AvN0ZZKHiG
— The New Indian Express (@NewIndianXpress) May 27, 2020
மேலும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ஆக்ஸிசன் செலுத்தப்பட்டது. தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் தர்மா ரெட்டி மற்று காவல் கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர். குழந்தை 25 முதல் 30 அடி ஆழத்தில் இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனை அடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் தோண்டப்பட்ட பள்ளம் மூலமாக குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆனால் அச்சம், கோடைகாலத்தால் நிலத்தில் உள்ள வெப்பம் காரணமாக குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இதேபோல திருச்சி அருகே சுஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.