எங்க 'ஓட' பாக்குறீங்க?... 'எல்லையில்' சிக்கிய 'தம்பதி'... 'வடகொரிய' அதிகாரிகளின் 'கொடூர' செயல்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், சீன நாட்டின் அருகே அமைந்துள்ள வடகொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.
பொதுவாக மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வடகொரியாவின் நடக்கும் செய்திகள் என்பது எப்போதும் மர்மம் நீடிக்கும் ஒன்று தான். பத்திரிகையாளர்கள் அல்லது அதிகாரிகள் செய்திகளை கசிய விட்டால் அவர்கள் கதி திண்டாட்டம்தான். சில தினங்களுக்கு முன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும், அவர் உயிரிழந்ததாகவும் பல்வேறு வதந்திகள் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் பொது நிகழ்ச்சி ஒன்றில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், வடகொரியாவின் ரியான்காங் மாகாணத்திலுள்ள ஹியென்சன் என்ற இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இவருடன், மனைவியின் இளம் சகோதரரின் 14 வயது மகனும் வசித்து வந்துள்ளார். கொரோனா காரணமாக அந்நாட்டில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தென்கொரியாவை சேர்ந்த அந்த பையனை அவனது சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு தாங்களும் சீனாவிற்கு தப்பியோட நினைத்துள்ளனர்.
இரு நாட்டுக்கும் இடையே, யாலு ஆறு ஓடும் நிலையில் அதன் மூலம் கடக்க முயற்சித்துள்ளனர். ஆனால் வடகொரிய அதிகாரிகள் இருவரையும் பிடித்துவிட்டனர். சிறுவனுக்கு 14 வயது என்பதால் அவனை விடுவித்த நிலையில், அந்த தம்பதியை சில நாட்கள் கொடுமைப்படுத்தி பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.