'கொழந்தை' பொறந்து 5 மாசமாச்சு... அழைக்க சென்ற 'கணவருக்கு' காத்திருந்த அதிர்ச்சி... அடுத்தடுத்து 'தற்கொலை' செய்துகொண்ட தம்பதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரசவத்திற்கு சென்ற மனைவியை அழைத்து வருவதற்காக சென்ற கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த சத்யாதேவி(23) என்பவருக்கும், அரியலூர் மாவட்டம் நல்லாம்பாளையத்தை சேர்ந்த கணேசன்(26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரசவத்திற்காக தாய்வீடு சென்ற சத்யா 5 மாதங்கள் ஆகியும் அங்கேயே தங்கியிருந்தார்.
2 நாட்களுக்கு முன் கணேசன் சத்யாவை அழைத்துவர மாமனார் வீடு சென்றுள்ளார். அங்கு கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதில் மனமுடைந்த சத்யா அங்குள்ள அறையொன்றில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனைவி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் அதே வீட்டில் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 மாத குழந்தையை தவிக்கவிட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
