80 வயது 'முதியவர்' மீது பாலியல் 'புகாரளித்த' 22 வயது இளம்பெண் ... பதிலுக்கு முதியவர் செய்த 'வேற' லெவல் காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 11, 2020 12:29 AM

தெலுங்கானா மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் தன்னை எண்பது வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசாரிடம் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 yr old man who sexually assualted 22 yr old girl

பலக்னுமா பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண், சில மாதங்களுக்கு முன் தனது கணவரை பிரிந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் உறவினரான எண்பது வயது முதியவர் ஒருவர் அந்த பெண் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். அந்த பெண்ணுடன் அவரின் ஆண் நண்பர் ஒருவரும் உடன் வசித்து வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அந்த முதியவரின் வீட்டிற்கு அந்த பெண்ணும், அவரது ஆண் நண்பரும் சென்றுள்ளனர். அப்போது மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சற்று போதையில் இருந்த இளம்பெண்ணை அந்த முதியவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது.

இத்தனை நாட்கள் மவுனம் காத்து வந்த அந்த பெண், இரண்டு நாட்களுக்கு முன்னர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். மேலும் ஒரு திருப்புமுனையாக, அந்த முதியவரும் போலீசாரிடம் இளம் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த விலை மதிப்புள்ள வாட்ச் ஒன்றை இருவரும் சேர்ந்து திருடியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருவரும் மாறி மாறி குற்றங்களை சுமத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார் தற்போது குழப்பமடைந்துள்ளனர்.

Tags : #TELANGANA