தமிழகத்தில் '17' வெளிநாட்டு நிறுவனங்கள்... சுமார் 15 ஆயிரம் கோடிக்கு 'முதலீடு'... 'இத்தனை' பேருக்கு 'வேலை' கிடைக்குமாம்... தமிழக அரசின் செம 'பிளான்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜெர்மனி, பின்லாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 17 நிறுவனங்கள் ரூ. 15, 128 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கையெழுத்தாகின.
இதில் 9 நிறுவனங்கள் நேரடியாகவும், மற்ற 8 நிறுவனங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் ஒப்பந்தம் செய்தன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய இங்கிலாந்து கூட்டு முயற்சியான Chennai Power Generation Limited நிறுவனத்தின் இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்திற்கு MOU கையெழுத்தானது. இதன் மூலம் சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.900 கோடி முதலீட்டில் சுமார் 600 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சார்ந்த Polymatech Elections நிறுவனத்தின் Semiconductor Chips உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 'கொரோனா வைரசுக்கு எதிராக நாம் போராடி வரும் நிலையில், சிறப்பு முதலீடு ஊக்குவிப்பு குழுவை நான் முன்னதாக அமைத்திருந்ததன் பயனாக 17 நிறுவனங்களுடன் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளோம். அந்த 17 நிறுவனங்களும் தமிழகத்தில் 15, 128 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளன. இதன் மூலம் சுமார் 47,000 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும், தமிழகத்தில் மேலும் அதிக வேலை வாய்ப்பை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.