‘200 ஆண்டு பழமை வாய்ந்த சிலை!’.. ‘பெற்றோர், மகன் என 3 பேர் கூட்டாக போட்ட ப்ளான்!’.. 28 நாட்களில் அதிரடி காட்டிய போலீஸார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்குதான் கோயில் அர்த்த மண்டபக் கதவின் பூட்டை உடைத்து இரவு நேரத்தில் சென்ற சிலர் சிலைகளை கொள்ளையடித்துள்ளனர்.

தவிர, மூலவர் மண்டபம் மற்றும் பத்மாவதி ஆகிய சந்நதிகளின் முகப்பில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த அரை அடி உயரம் கொண்ட ஸ்ரீனிவாச பெருமாளின் உலோகச் சிலை, ஒன்றரை அடி உயரமுடைய பத்மாவதி சிலை, வெள்ளிச்சடாரி, வெள்ளிக்கவசம், வெள்ளித்தட்டு மற்றும் வெள்ளிக்கிரீடம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனர்.
அடுத்த நாள் கோயிலைத் திறந்தபோதுதான் அனைவருக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. இதனை அடுத்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் டிஎஸ்பி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் கும்பகோணம் கணபதி நகரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ராமலிங்கமும் அவரது மனைவி ராசாத்தியும்தான் சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ராமலிங்கத்தை வைத்து, அவரது நண்பரான தஞ்சாவூர் மெல்வின் சகாயராஜ் மற்றும் ராமலிங்கத்தின் மகன் கமல்ராஜ் உள்ளிட்டோர் சிலையைக் கொள்ளையடித்தது ஊர்ஜிதப்படுத்தப் பட்டது. அதன் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 28 நாட்களில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த போலீஸாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
