‘பெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 12, 2019 05:35 PM

சென்னையில் திருமணம் முடிந்த 3வது நாளில் புதுமாப்பிள்ளை சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் பெண் வீட்டாரை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

Chennai 3 Days After Marriage Man Arrested For Robbery

சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஐசக் என்பவருடைய வீட்டில் 2 மாதங்களுக்கு முன் 50 சவரன் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை போயுள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஏற்கெனவே பல வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபர்தான் இந்தக் கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

ஆரோக்ய ஜான்போஸ்கோ என்ற அந்த நபர்மீது திருச்சி, பல்லடம், இளையாங்குடி, புதுக்கோட்டை, திருமங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களின் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது ஆரோக்ய ஜான்போஸ்கோ சென்னையில் இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்தபோது, அவருக்கு சமீபத்தில் திருமணமானது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாமியார் வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை ஆரோக்ய ஜான்போஸ்கோவை பிடித்து போலீஸார் விசாரித்தபோது முதலில் கொள்ளை அடித்ததை மறுத்தவர் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணை காதலித்த ஆரோக்ய ஜான்போஸ்கோ திருடிய பணம், நகைகளைக் கொண்டு திருமணம் செய்துள்ளார். காதல் மனைவிக்கும், அவருடைய வீட்டாருக்கும் விதவிதமாக நகை, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என அள்ளிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த 3வது நாளில் கணவர் திருடன் எனத் தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துபோன புதுப்பெண் கண்ணீருடன் தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.

Tags : #CHENNAI #ROBBERY #MARRIAGE #BRIDE #GROOM #MONEY #JEWELLERY #THEFT #LOVE