‘போதும் குடுங்க.. வாட்ஸ்ஆப்ல அனுப்பி வைக்கிறேன்!’ .. ‘செல்ஃபி எடுக்கும்போது செல்போனை தட்டிச்சென்று பறந்த திருடன்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 04, 2020 03:54 PM

செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த பெண்களிடம் இருந்து, அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் செல்போனை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

biker Steals women cellphone when the pose for selfie

பஞ்சாபின் ஜலந்தர் பகுதியில் சாலையின் ஓரமாக நின்று கொண்டு இரண்டு பெண்கள் செல்ஃபி எடுப்பதற்காக போஸ் கொடுத்தபடி நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களுள் ஒரு பெண் செல்ஃபி எடுக்க முனைகிறார். அப்போது அந்த வழியே மோட்டார் பைக்கில் வந்த நபர் ஒருவர் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த அந்த பெண்களிடமிருந்து செல்போனை, கண் இமைக்கும் நொடியில் தட்டிச்சென்று கொண்டு பைக்கில் பறந்துவிட்டார்.

செல்ஃபி எடுக்கும்போது, இலகுவாக செல்போனை பிடித்திருந்ததால் அந்த திருடன் தட்டென  செல்போனை எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருந்ததாகவும் அப்பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளாக வெளியாகி, வைரலாகி வரும் நிலையில் அதனை வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #SMARTPHONE #SELFIE #POSE #THEFT