'மகளிர் தினத்தில்'... 'மோடியின் ட்விட்டர் அக்கெவுண்ட்டை நிர்வகித்த'... 'கைகளை இழந்தாலும்... நம்பிக்கை இழக்காத கும்பகோணத்து இளம்பெண்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 09, 2020 06:45 AM

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் சமூக வலைத்தள கணக்குகளை தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட 7 பெண் சாதனையாளர்கள் கையாண்டனர்.

Malvika Iyer who UTILIZING PM MODI\'S SOCIAL MEDIA ACCOUNT

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனது சமூக வலைத்தள கணக்குகளை கையாளும் பொறுப்பை மார்ச் 8-ந் தேதி ஒருநாள் மட்டும், எனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தையும் தங்கள் வாழ்க்கையாலும், பணியாலும் நமக்கு உத்வேகம் அளித்த பெண்களிடம் வழங்கப்போகிறேன். இது லட்சக் கணக்கானவர்களை ஊக்கமூட்டுவதற்கு அவர்களுக்கு உதவும் என்று கடந்த வாரம் பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் அறிவித்தபடியே நேற்று ஒருநாள் தனது வலைத்தள கணக்குகளை 7 பெண் சாதனையாளர்களிடம் வழங்கினார். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ், மாளவிகா ஐயர் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். இந்திய உணவு வங்கி என்ற பெயரில் ஏராளமான தன்னார்வலர்களுடன் இணைந்து அமைப்பு ஒன்றை நடத்தி வரும் சென்னையை சேர்ந்த சினேகா மோகன்தாஸ், நாள்தோறும் ஏராளமான ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருகிறார்.

இதேபோல், கும்பகோணத்தில் பிறந்த மாளவிகா ஐயர் என்ற இளம் பெண், தனது 13-வது வயதில், கடந்த 2002-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி, கைகள் இழந்து, கால்களும் பாதிக்கப்பட்ட மாளவிகா ஐயர் தன்னம்பிக்கை பேச்சாளராகவும், மாற்றுத்திறனாளி ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். தன்னம்பிக்கையுடன் படித்து பி.எச்டி பட்டம் பெற்ற அனுபவத்தை மாளவிகா ஐயர், நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அத்துடன் இவர் மாடலிங்கும் செய்து வருகிறார்.

இவர் தனது பதிவில், ‘எதற்காகவும் முயற்சியை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்கள் வரம்புகளை மறந்து விடுங்கள. நம்பிக்கையுடன் உலகை வெல்லுங்கள்’ என்று குறிப்பிட்டார். இவர்கள் தவிர, காஷ்மீர் கைவினை கலைஞர் ஆரீபா,மஹாராஷ்டிரா வின் பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரிய கோர்முகி கைவினை கலைஞர் விஜயபவார், தண்ணீர் சிக்கனம், மழை நீர் சேகரிப்பு குறித்த ஆய்வாளர் கல்பனா ரமேஷ் , கான்பூர் கட்டிட தொழிலாளி கலாவதி தேவி, பீஹார் காளாண் வளர்ப்பு தொழில் ஆர்வலர் வீணா தேவி ஆகியோரும், பிரதமரின் சிங்கப்பெண்கள், பட்டியலில் இடம் பிடித்து, நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவிட்டுள்ளனர்.

Tags : #NARENDRAMODI #TWITTER #MALVIKA IYER #KUMBAKONAM