'கல்லாப்பெட்டியில பணம் அப்படியே இருக்கு!'.. ஆனா திருடு போனது இதுதான்!.. 'வியப்பில்' ஆழ்த்திய 'விசித்திர' திருடர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 28, 2019 10:52 AM

வெங்காயம் விற்கும் விலைவாசியில், கடைக்குள் புகுந்த திருடர்கள் கல்லாப் பெட்டியில் பணம் இருந்தும் பணத்தைத் திருடாமல், வெங்காயத்தை மட்டும் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Thieves steal onion bags despite looking at cash in drawer

இந்திய சந்தை முழுவதும் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், வெங்காயம் அதிக விலைக்கு கிடைப்பதே தட்டுப்பாடான நிலையில் உள்ளது. குறிப்பாக வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் வகிக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பொழிந்த அதிக மழைபொழிவால் வெங்காய விளைச்சலும், அதனைத் தொடர்ந்து விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தட்டுப்பாடு உருவாகும்போது, விலை அதிகரிக்கும் யதார்த்தமான நியதியே தற்போதைய வெங்காய விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இப்படியான நிலையில்தான் கொல்கத்தாவில் சுடஹட்டா பகுதியில் வெங்காய கடையில் புகுந்த மர்ம நபர்கள், கல்லாப்பெட்டியைத் திறந்து பார்த்துள்ளனர். ஆனாலும் அதில் இருந்த பணத்தை அப்படியே வைத்துவிட்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காய மூட்டையை திருடிச் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெங்காயத்தின் உற்ற நண்பர்களான இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்டவற்றையும் அவர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #ONION #THEFT