'சென்னை சேப்பாக்கத்தில்'... ‘விக்கெட் கீப்பிங் பயிற்சியின்போது’... ‘தல தோனியை மிரள வைத்த ரசிகரால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியின் போது, தோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் 29-ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் அச்சுறுத்தி வந்தாலும், திட்டமிட்டபடி ரசிகர்கள் முன்னிலையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மையதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். சிஎஸ்கே கேப்டன் தோனியும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இரும்பு வேலியை தாண்டி, விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த தோனியை நோக்கி வேகமாக ஓடிவந்த ரசிகர் ஒருவர், கீழே விழுந்த வேகத்தில் தோனியின் காலை இறுகப் பற்றிக்கொண்டார். இதனால் சில நொடிகள் தோனி மிரண்டுப் போனார். அருகில் இருந்த வீரர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தடுத்து அந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பினர். பின்னர் தோனி பயிற்சியை தொடங்கினார். தற்போது காவல்துறையினர் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் கேலரியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
