"15 நிமிடத்தில் அமேசான் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?"... "தலைசுற்றிப் போகும் அளவுக்கு இத்தனை சைபர்களா?!"...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஜெஃப் பிசோஸின் சொத்து மதிப்பு 15 நிமிடங்களில் 9,30,00,00,00,000 ரூபாய் அளவு உயர்ந்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர், ஜெஃப் பிசோஸ். இன்றைய தேதியில் இவர் தான் உலகின் மிகப்பெரும் செல்வந்தர்.
அந்நிறுவனத்தின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வணிக இலக்கை முறியடிக்கும் வகையில், அதன் பங்குகளின் மதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், அமேசானின் பங்குகள் நேற்று மட்டும் வழக்கத்தைவிட 12 சதவீதம் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, வெறும் 15 நிமிடங்களில் 13 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வருவாயை, பிசோஸ் ஈட்டியுள்ளார். இது இந்திய ரூபாயில் சுமார் 93 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #AMAZON #JEFFBEZOS #WEALTH
