‘ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பேர்’.. ‘ஒரே நாளில் கல்யாணம்’!.. திரும்பி பார்க்க வைத்த கேரளா சகோதரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 08, 2019 01:29 PM

கேரளாவில் ஒரே நாளில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற உள்ளது.

Kerala quintuplets sisters to tie knot on same day

கடந்த 1995-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பிரேம்குமார்-ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தைகள் உத்திர நட்சத்தில் பிறந்ததால் அவர்களுக்கு உத்ரஜா, உதரா, உதாரா, உத்தமா மற்றும் உத்ராஜன் என பெயர் வைத்துள்ளனர். அவர்களது 9 வயதில் தந்தை எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறார்.

இதனை அடுத்து தாய் ரமாதேவி தனியாளாக குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். 4 பெண்களில் ஒருவர் ஆடை வடிவமைப்பாளராகவும், இரண்டுபேர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், ஒருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் உள்ளனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி 4 சகோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சகோதரர் உத்ராஜன் செய்து வருகிறார்.

Tags : #KERALA #QUINTUPLETS #MARRIAGE