'அவரிடமிருந்து கிடைத்த கிஃப்ட் என வச்சுக்கோங்க'... ‘பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தை’... 'திருமணமாகாத இளம்பெண் செய்த காரியம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Nov 06, 2019 08:58 AM

திருமணமாகாத இளம்பெண் ஒருவர், தனது குழந்தையை பள்ளிவாசலில் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kerala woman arrested for the abandoning the girl infant

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவன்னூர் கிராமத்தில், மதராஸா என்ற பள்ளிவாசல் உள்ளது. இங்கே காலை சுமார், 8.30 மணியளவில், தொழுகை முடிந்து வந்தபோது, பள்ளிவாசலில் காலணிகள் (Slippers) வைக்கும் இடத்தில், ஒரு போர்வையில் குழந்தை ஒன்று சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுவும் 4 நாட்களே ஆன பெண் குழந்தை என்பதால், அங்கிருந்தவர்கள் பதறிப்போயினர். மேலும் குழந்தையின் பக்கத்தில், ஒரு கடிதம் ஒன்றும் கிடைத்தது.

அதில், ‘உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப குழந்தைக்கு பேர் வைத்துக்கொள்ளுங்கள். அல்லாவிடமிருந்து கிடைத்த பரிசாக நினைத்து, இந்த குழந்தையை இனிமேல் பார்த்துக்கொள்ளுங்கள். அல்லா நமக்கு என்ன கொடுத்தாரோ, அதை நாம் அவரிடமே திருப்பி தருகிறோம். இந்தக் குழந்தைக்கு எல்லாவிதமான தடுப்பூசிகளையும் போடுங்கள் என்று எழுதியிருந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில்,கைவிடப்பட்ட குழந்தையின் தாய் 21 வயதே ஆன, இளம்பெண் என்றும், அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணை கைதுசெய்த போலீசார், அப்பெண்ணுக்கு, பிரவத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக, கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அப்பெண், குழந்தையின் தந்தையுடன் வந்து பள்ளிவாசலில் விட்டுச்சென்றது தெரியவந்ததால், குழந்தையின் தந்தையான 21 வயது இளைஞருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Tags : #KERALA