‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 11, 2019 01:18 PM

சென்னையில் அண்ணனை, கூடப் பிறந்த தம்பிகளே கழுத்தறுத்து, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

younger brothers murder elder brother in property dispute

சென்னை ஐஸ் ஹவுஸ், அயோத்தியா நகர் 29-வது பிளாக்கில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளியான சக்திவேல் (48). இவருடைய இளைய சகோதரர்கள் ஞானவேல் (45), மற்றும் கந்தவேல் (37). இவர்களுக்கு சொந்தமான குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், ஒரு வீட்டில் திருமணமாகாத அண்ணன் சக்திவேல் வசித்து வந்துள்ளார். மற்றொரு வீட்டில், திருமணமான தம்பிகள் இருவரும், தங்களது குடும்பங்களுடன் வசித்து வந்துள்ளனர். அண்ணன்-தம்பிகள் 3 பேர் உள்ளநிலையில், 2 வீடுகள் மட்டுமே இருந்ததால், அதனை பிரித்துக் கொள்வதில், தகராறு இருந்து வந்துள்ளது.

மேலும் குடிபோதைக்கு அடிமையான சக்திவேல், தம்பிகளின் வீட்டிற்கு சென்று, அங்கு அவர்களின் மனைவிகளிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, வழக்கம்போல் குடிபோதையில் சக்திவேல், தம்பிகளின் வீட்டிற்கு சென்று வீடு பிரிப்பதில் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது இல்லத்திற்கு சென்று தூங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் சேர்ந்து, அண்ணன் சக்திவேலின் கழுத்தை ஆக்ஸா பிளேடால் அறுத்து கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த சக்திவேலை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தநிலையில், அவர் பாதி வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையில், தப்பித்துச் சென்ற தம்பிகள் இருவரையும், லாயிட்ஸ் சாலை சந்திப்பில் உள்ள வெங்கட் ரங்கம் பிள்ளை தெருவில் வைத்து, போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MURDER #BROTHER #ELDER #YOUNGER #CHENNAI