‘ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை’... ‘பிரித்துப் பார்த்த வாடிக்கையாளருக்கு’... ‘காத்திருந்த அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 12, 2019 05:58 PM

ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில், தான் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, வெறும் கவர் மட்டும் வந்ததால், வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

man order wallet but he get empty cover in online shopping

திருச்செந்தூர் கீழ நாலுமூலைக்கிணறு பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் ஷாப்பிங் தளத்தில், சுமார் 200 ரூபாய் மதிப்பிலான மணி பர்ஸ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், ஆன்லைன் தளத்திலிருந்து, அவரது முகவரிக்கு, டெலிவரி பார்சல் வந்துள்ளது. மிகவும் ஆசையாக அதனைப் பிரித்து பார்த்த பார்த்திபன், பார்சலில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், அதில் அவர் ஆர்டர் செய்த மணி பர்சுக்கு பதிலாக, ஒரு கவர் மட்டும் மடித்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர், ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது, டெலிவரி பேக்கிங் நேரத்தில் ஏதாவது தவறு நடந்திருக்கலாம் என்று அந்த நிறுவனம் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பார்த்திபன் ஆர்டர் செய்த மணி பர்ஸ், திரும்பவும் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆன்லைன் நிறுவனம் கூறியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #ONLINE #SHOPPING #MONEY #PURSE