நாலு பேர் முன்னாடி 'இப்டி' செஞ்சிட்டாங்களே.. 'காதலி'யின் குடும்பத்தினரால்.. இளைஞர் தற்கொலை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 13, 2019 11:09 AM

கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த ஷாகிர்(22) என்ற இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து உள்ளனர். இதனையறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஷாகிரை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களின் எச்சரிக்கையை ஷாகிர் பொருட்படுத்தவில்லை.

Kerala man commits suicide after alleged thrashing by lover’s family

இந்தநிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் கோட்டக்கல் பகுதியில் வைத்து ஷாகிரை சந்தித்துள்ளனர். ஆரம்பத்தில் ஷாகிருடன் வாக்குவாதம் செய்த குடும்பத்தினர் பின்னர் கண்மூடித்தனமாக அவரைத்தாக்க ஆரம்பித்து உள்ளனர். இதனை அறிந்த ஷாகிரின் நண்பன்  அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரையும் அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஷாகிரின் அண்ணன் மற்றும் அவரது அம்மா இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷாகிரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.வீட்டுக்கு வந்த ஷாகிர் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையறிந்த வீட்டினர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே மயக்கம் அடைந்த ஷாகிர் திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

தற்போது ஷாகிரை தாக்கியதாக அந்த பெண்ணின் குடும்பத்தார் உட்பட சுமார் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே நேரம் ஷாகிரின் மரணத்தை தொடர்ந்து அவரது காதலியும் தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் கோட்டக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #KERALA