'மிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்'...'காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 12, 2019 06:13 PM

முகம் பார்க்காமல் செல்போனில் காதல் செய்த வாலிபர், தனது காதலியை நேரில் சந்தித்த போது அதிர்ச்சி அடைந்து ஊரை கூட்டிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

Married Woman\'s secret lover turns out be a plus one student

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு மிஸ்டு கால் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் ஆண் ஒருவர் பேசியுள்ளார். அப்போது இருவரும் பேச ஆரம்பிக்க, இது தினமும் தொடர்ந்துள்ளது. இதையடுத்து நாட்கள் செல்ல செல்ல இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முகம் தெரியாமல் இருவரும் பழகிய போதும், இருவரும் காதல் வலையில் விழுந்தனர். இருவரும் மாறி மாறி அன்பை பரிமாறி கொள்ள காதல் நெருக்கம் அதிகமானது.

ஒருகட்டத்தில் நான் உன்னை பார்க்க வேண்டும் என அந்த பெண் கூற, அந்த இளைஞர் ஏதேதோ காரணங்கள் கூறி அதனை தவிர்த்து வந்தார். இதனிடையே என் வீட்டில் இந்த தேதியில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்றும் அன்று தனது வீட்டுக்கு வருமாறு அந்த வாலிபர், தனது காதலியான அந்த பெண்ணை அழைத்துள்ளார். மேலும் தனது முகவரியையும் அனுப்பியுள்ளார்.

திருணமானவர் என்பதை மறந்து, தனது கணவருக்கு தெரியாமல் அந்த பெண் காதலனை சந்திக்க அவரது ஊருக்கு சென்றுள்ளார். காதலன் அனுப்பிய முகவரியில் சென்று அந்த வீட்டின் கதவை தட்டிய போது, 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வந்து கதவை திறந்து, உங்களுக்கு யார் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது தனது காதலனின் பெயரை அந்த பெண் கூற, அது நான் தான் என அந்த மாணவன் கூற அந்த பெண்ணிற்கு தூக்கி வாரி போட்டுள்ளது.

இதையடுத்து அந்த மாணவன் நீங்க யாரு அக்கா என கேட்க, அதற்கு அந்த பெண், தனது பெயரை கூற அதிர்ச்சியில் அந்த மாணவன் கூச்சல் போட்டுள்ளான். அந்த மாணவன் தான் காதலிக்கும் பெண் ஒரு மாணவி என்ற நினைப்பிலேயே இருந்துள்ளான்.

இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வர அவர்களிடம் நடந்த விவரங்களை அந்த மாணவன் கூறினான். அவர்கள் அந்த பெண்ணின் கணவனை வரவழைத்து அந்த பெண்ணிற்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர். அந்த மாணவன், தனது அப்பாவின் போன் மூலம் இந்தப் பெண்ணிடம் பழகி வந்தது தெரியவந்தது.

Tags : #KERALA #SCHOOLSTUDENT #ROMANCE #BOYFRIEND #HOUSEWIFE