‘ஊழியருடன் தொடர்பு’... ‘மெக்டொனால்ட்ஸ் CEO-வை’... ‘அதிரடியாக தூக்கிய நிர்வாகம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 04, 2019 01:00 PM

பிரபல துரித உணவகமான மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், கொள்கைகளை மீறியதாக, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளது.

McDonald\'s fires CEO Easterbrook Consensual relationship

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் துரித உணவகம் மெக்டொனால்ட்ஸ். இதற்கு உலகம் முழுவதிலும் பல கிளைகள் உள்ளன. இதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO), கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர், ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் (52). மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் விதிகளின்படி, உயர் பதவி வகிப்பவர்கள், அங்கு பணிபுரியும் ஊழியருடன் காதலில் ஈடுபடுவது, சேர்ந்து வசிப்பது, திருமணம் செய்துகொள்வது போன்ற எந்தவிதத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாக தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது.

ஆனால், இதனை மீறி, ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக், அங்கு பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவரின் சம்மதத்துடன் ரிலேஷன்ஷிப்பில் (Consensual Relationship) இருந்ததாக நிறுவனத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து CEO ஈஸ்டர்ப்ரூக்கிடம், இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டது. தவறு நடந்துவிட்டதாக அவர் ஒத்துக்கொண்டதை அடுத்து, தலைவர் மற்றும் CEO பதவியிலிருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நீக்கப்பட்டார். இதனை ஈஸ்டர்ப்ரூக், தனது ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதம் மூலம் தெரியவந்தது. 

இதன்பின்னர் புதிய தலைவர் மற்றும் CEO-ஆக கிறிஸ் கெம்ப்ஸ்சின்ஸ்கை நியமிக்கப்பட்டார்.  பொதுவாக வேலையில் இருக்கும் இருவர் சம்மதத்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால், அது தவறாக கணக்கிடப்படாது. ஆனால், தற்போது METOO விவகாரத்தால், கடந்த 2 வருடங்களாக, மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், பாலியல் தொல்லை, ஊழியர்களுடனான உறவு உள்ளிட்டவற்றில், பிரச்சனைகள் எழாமல் இருக்க, அதிகளவில் கவனம் செலுத்தி, கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே, தற்போது ஈஸ்டர்ப்ரூக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : #STEVEEASTERBROOK #MACDONALDS #FASTFOOD #AMERICA