'தங்கையின் திருமண ஏற்பாடுகளை கவனித்தபோது’... 'அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 04, 2019 09:24 AM

திருச்சி அருகே தங்கையின் திருமணம் அடுத்தநாள் நடைபெற இருந்தநிலையில், அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

trichy sister marriage stops after her brother died

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டி காட்டுவீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தனபால் (29) பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர். இரவது மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், இவருடைய கடைசி தங்கைக்கும், முசிறி அருகே உடையான்பட்டியை சேர்ந்த குமரன் என்பருக்கும், நேற்று காலை சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது.

இதனால் நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்கான சமையல் உள்ளிட்ட ஏற்பாடுகளை, மணப்பெண்ணின் அண்ணனான தனபால் செய்து கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள வயல் பகுதிக்கு தனபால் சென்றார். இருள்சூழ்ந்து இருந்ததால், அவர் கால் இடறி, அருகில் இருந்த தண்ணீரில்லாத கிணற்றுக்குள் விழுந்தார். இயற்கை உபாதைக்கு சென்ற தனபாலை நீண்ட நேரம் காணாததால், அவருடைய தந்தை தனது மகனை தேடி வயல்பகுதிக்கு சென்றார்.

அங்கு தனபால் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர், கிணற்றுக்குள் பார்த்த போது, தனபால் கிணற்றுக்குள் தவறி விழுந்து மயங்கி கிடந்தார். இதைத்தொடர்ந்து தனபாலை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மணப்பெண்ணின் அண்ணன் இறந்ததால், அவரது குடும்பத்தார் கதறித்துடித்தனர். மேலும் நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DIED #BROTHER #SISTER #TRICHY