ஹைதராபாத்தில் 'மீண்டும்' பயங்கரம்... மாயமான 'இளம்பெண்'... 9 நாட்களுக்கு மேலும் 'துப்பு' கிடைக்காமல் திணறும் போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jan 05, 2020 12:56 AM

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம்பெண் மாயமாகி 9 நாட்களுக்கு பிறகும் அதுகுறித்த துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது.

Hyderabad Techie missing, Family wants public support

ஹைதராபாத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஹிதா(34) என்னும் இளம்பெண் கடந்த 26-ம் தேதி காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் 9 நாட்களுக்கு மேலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அவரது பெற்றோர் போலீசார் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் தகவல் அளித்தும் அவரது பெற்றோர் தங்களது மகள் குறித்து தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அபார்ட்மெண்டில் நண்பர்களுடன் தங்கியிருந்த ரோஹிதா சம்பவ தினத்தன்று வீட்டில் மொபைலை வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறி காச்சிபவுலி  பகுதியில் சென்று இறங்கிய அவர் அதற்குப்பின் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் இந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். இந்த விவகாரம் தற்போது தெலுங்கானாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.