அடேங்கப்பா! ஜனவரில மட்டும் '16 நாள்' லீவாம்... எந்தெந்த தேதில.... 'பேங்க்' இருக்காதுன்னு தெரிஞ்சுக்கங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jan 02, 2020 12:35 AM

ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Complete list of bank holidays in India, for January 2020

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு ஜனவரியில் மட்டும் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை தினங்கள் வருகின்றன. குறிப்பாக புத்தாண்டு, பொங்கல், சனி-ஞாயிறு என தமிழகத்துக்கு ஏராளமான விடுமுறை தினங்கள் வருகின்றன. அந்த 16 நாட்கள் எந்த தேதி மற்றும் கிழமையில் வருகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.

வருடத்தின் முதல் நாளான இன்று அரசு விடுமுறை என்பதால் அனைத்து வங்கிகளும் இயங்காது. ஜனவரி 2-ம் தேதி மன்னம் ஜெயந்தியை முன்னிட்டு கேரளாவிலும், குரு கோவிந்த் சிங் ஜெயந்தியை முன்னிட்டு சில மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ம் தேதி சனிக்கிழமை மிசினரி தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலத்தில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலும், மகர சங்கராந்தி, போகலி பிகு, துசு பூஜா, ஹடாகா பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அஸ்ஸாம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆந்திரா, புதுச்சேரியிலும் அன்று வங்கிகளுக்கு விடுமுறைதான். ஜனவரி 17-ம் தேதி உழவர் திருநாள் என்பதால் அன்று தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வங்கிகள் செயல்படாது. ஜனவரி 23-ம் தேதி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு மேற்குவங்கம், திரிபுரா, ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. ஜனவரி 25-ம் தேதி சோனம் லோச்சர் பண்டிகையை முன்னிட்டு சிக்கிமிலும், இமாசலப் பிரதேச மாநில நாளை முன்னிட்டு இமாசலப் பிரதேச வங்கிகளும் இயங்காது.

ஜனவரி 25-ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்று வழக்கம்போல வங்கிகளுக்கு விடுமுறை. ஜனவரி 30-ம் தேதி வசந்த் பஞ்சமியை முன்னிட்டு சில மாநிலங்களில் வங்கிகள் இயங்காது. ஜனவரி 31-ம் தேதி மே டாம் மே பி பண்டிகையை முன்னிட்டு அஸ்ஸாம் மாநில வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் இயங்காது. மற்ற ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழக்கம்போல வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.