திருமணத்துக்கு மறுத்த.. ‘பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ குடிபோதையில் உளறியதால் சிக்கிய கொலையாளி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 31, 2019 08:13 PM

கடலூரில் திருமணம் செய்து கொள்ள மறுத்த அத்தை மகளை இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young woman brutally murdered for denying marriage proposal

கடலூர் சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி இவருடைய மூன்றாவது மகள் வெண்மதி காப்புக்காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர் தற்கொலை செய்துகொண்டதாக நினைத்துள்ளனர். 

இந்நிலையில் அவருடைய அத்தை மகன் பிரசாந்த் குடிபோதையில் அவர் தான் வெண்மதியைக் கொலை செய்ததாக உளறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வெண்மதியின் தந்தை இதுகுறித்து கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் வெண்மதியை பிரசாந்த் தான் கொலை செய்தார் என்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக பிரசாந்த் ஆறுமுகத்தின் இரண்டாவது மகள் லட்சுமியை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு அவருடைய பெற்றோரிடம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அவருடைய பெற்றோர்கள் மறுக்கவே மூன்றாவது மகள் வெண்மதியையாவது தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கும் அவர்கள் மறுக்க வெண்மதியிடமே நேரடியாக தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு பிரசாந்த் கேட்டுள்ளார். அதை ஏற்க மறுத்த வெண்மதி அவரை செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் அவரைக் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : #CUDDALORE #MARRIAGE #PROPOSAL #BRUTAL #MURDER #SUICIDE