'என்ன காரியம் பண்ணுன நீ?.. 6 வயது இளம் பெண் புலி.. அடித்தேக் கொன்ற கிராம மக்கள்.. உருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 26, 2019 10:53 AM

உத்திரபிரதேசத்தின் லக்னோவில் கிராமத்து நபர் ஒருவரைத் தாக்கிய இளம் புலியை, கிராம மக்கள் கூட்டமாக சேர்ந்து தடியால் அடித்துக் கொன்றுள்ள காட்சி பதைபதைக்க வைத்துள்ளது.

villagers beaten 6 yr old tigress after 9 people injured

லக்னோவில் இருந்து 240 கி.மீ தூரத்துல் இருக்கிறது பிலிபித் புலிகள் புகலிடம். இங்குள்ள மெடெய்னா கிராம மக்கள், நபர் ஒருவரை தாக்கிய, இளம் பெண் புலியை அடிப்பதாக பேசி, வீடியோவாக பதிவு செய்துகொண்டே புலியை குரூரமாக தாக்குகின்றனர். இதனையடுத்து பல படுத்த காயம் அடைந்த, 6 வயதே ஆன இளம் பெண் புலி, வலி தாங்க முடியாமல் இறந்தே போயுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த வன ஆர்வலர்களை கிராம மக்கள் உள்ளே நுழைய விடவில்லை என்று பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து காட்டு விலங்குகளை துன்புறுத்தியதற்காகவும், தேசிய இன அடையாளங்களுள் ஒன்றான புலியை கூட்டமாக சேர்ந்து தாக்கி கொன்றதற்காக 31 கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து, போலிஸார் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : #TIGER #TIGRESS #VIDEOVIRAL #BIZARRE #ASSULT