'நீ யாரு?'..'நா அவரோட மனைவி'.. குரூரமாகத் தாக்கப்பட்ட தமிழ் பேசும் தம்பதியர்.. வீடியோவால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 24, 2019 10:52 AM

கேரளாவின் வயநாட்டில் தமிழ் பேசும் தம்பதியரை, கேரள மாநிலத்தின் உள்ளூர்காரர் ஒருவர் குரூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி தென்னிந்தியாவையே அதிர வைத்துள்ளது.

tamil speaking couple assaulted by wayanad local man

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த உள்ளூர்க் காரர் சஜீவானந்தன் என்பவர், கூட்டமான மக்களின் முன்னிலையில் ஒரு நபரை போட்டு குரூரமாகத் தாக்குகிறார். அப்போது அவரைத்தடுக்கச் செல்கிறார் ஒரு பெண்.

அந்த பெண்ணிடம், சஜீவானந்தன், ‘நீ யார்?’ என்று கேட்கிறார். அந்த பெண்,  ‘நான் அவரது மனைவ்’ என்கிறார்.  உடனே அந்த பெண்ணையும் சஜீவானந்தன் ஓங்கி அறைகிறார். இதை அங்கு கூடியிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பின்னர் சமூக வலைதளத்தில் வெளியான இந்த வீடியோ பலரையும் உலுக்கியுள்ளது. இதனையடுத்து, தாக்குதல் நிகழ்த்திய சஜீவானந்தம்  மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரைத் தேடிவருகின்றனர். 

இதேபோல் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட தம்பதியர் (என்று கூறப்படும்) இருவரும் தமிழ் பேசுபவர்கள் என்பதும் தெரியவந்ததை அடுத்து, விசாரித்தபோது, அவர்கள் இருவரின் உறவில் சந்தேகப்பட்டு ஜீவானந்தம் தாக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து அம்பலவயல் போலீஸார் இந்த வீடியோவில் உள்ளவர்களைத் தேடிவருகின்றனர்.

Tags : #KERALA #BIZARRE