'இப்படி ஒரு பிரச்சனையா?'.. '29 வயது ஆணுக்கு'.. நடந்த விசித்திரமான ஆபரேஷன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 12, 2019 01:36 PM

ஆண் நபர் ஒருவருக்கு பெண்பால் இனப்பெருக்க உறுப்பு இருந்துள்ளது மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

doctors removed female reproductive organs of a man

மும்பையில் மிகவும் அரிதாக 29 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்குள் பெண்பால் இனவிருத்திகான கருப்பையும், பெண்பால் இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத் தன்மையுடன் இருந்திருக்கிறது என்பதும் மருத்துவர்களின் பரிசோதனையின் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இந்த நபரின் அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புப் பகுதிகள் உள்ளிட்டவை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. இதுபற்றி பேசிய மருத்துவர்கள் இந்த அரிதான நோய்க்குறியுடன் கூடிய 200 நோயாளிகளை பார்த்துள்ளதாகவும், இதன் பெயர் Persistent Mullerian Duct Syndrome என்றும் விளக்கியுள்ளனர்.

அவ்வகையில் இந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டாலும், azoospermia என்கிற நோய் இருப்பதால், இந்த நபருக்கு குழந்தை பாக்கியம் இராது என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags : #DOCTORS #BIZARRE