'சைக்கோ கில்லரின்' டார்கெட் இவங்க மட்டும் தான்'... 'உஷாரா இருங்க'... சைக்கோவை தேடும் போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 25, 2019 03:54 PM

ஒடிசாவில் புவனேஸ்வர் அருகே, ஒரு ஆதரவற்ற முதியவரின் உடல் சிதைந்த நிலையில் போலீஸார் கண்டுபிடித்தனர்.  இறந்து போன ஆதரவற்ற முதியவர், கிடைக்கும் வேலை செய்துகொண்டு, கிடைக்கும் உணவை உண்டுகொண்டு, கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்குபவர் என  அப்பகுதியில் சிலர் தெரிவித்துள்ளனர்.

psycho killer? man targets homeless people to kill

இந்த சம்பவம் ஒடிசாவின் ரேனிஹத் பகுதியில் உள்ள கத்தாக்கில் நிகழ்ந்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் பயத்தில் உறைந்தனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து, சாலியகாங் மற்றும் மங்கலாபாக் போன்ற பகுதிகளிலும் இதேபோல் அடுத்தடுத்து ஆதரவற்ற நபர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து போலீஸார் இதன் மீது மொத்த கவனத்தையும் குவித்தனர்.

நடந்த 3 கொலைகளும் ஒரே விதமாக நடந்ததாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்களில் ஒரே விதமான குறியீடுகளைக் காண முடிந்ததாகவும் கூறிய போலீஸார், கொல்லப்பட்ட அத்தனை பேருமே ஆதரவற்றவர்கள் என்றும் அவர்கள் நடைபாதையில் படுத்து உறங்கும்போது இரவு 2 மணிக்கு மேல் ஆள் அரவம் இல்லாத நேரத்தில் கொல்லப்பட்டிருப்பதாகவும் இதனை கண்டிப்பாக ஒரு சைக்கோ கில்லர் தான் செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இதனால் சைக்கோ கொலைகாரர்களிடம் இருந்து, ஆதரவற்றவர்களை முதலில் பாதுகாக்கும் விதமாக ஆதர்வற்ற இல்லங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், அவர்களுக்கு உறுதுணையாக தன்னார்வல இளைஞர்களை அணுகுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்தவரை பிடிக்கவும் முயற்சி செய்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

Tags : #MURDER #PSYCHOKILLER #BIZARRE #ODISHA