'கடைசியா இதுவும் நடந்தாச்சு'.. இன்னும் என்னலாம் ஆகுமோ? பொது 'குடிநீர்க் குழாயடி' சண்டையால் 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 16, 2019 10:36 AM
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீககுளத்தில் உள்ளது சோம்பேட்டை நகர். இங்குள்ள பொது குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது பெண்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்மணி இறந்துள்ள சம்பவம் பெருத்த அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சோம் பேட்டை நகரின் பள்ளி வீதியில் வசித்து வந்த, 38 வயதான பெண்மணி தத்திபுடி பத்மா. இவர் இந்த பகுதியில் உள்ள பள்ளி அருகே உள்ள, பொது குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொள்வதற்காகச் சென்றுள்ளார். பொதுவாகவே பொது குடிநீர்க் குழாயில் ஆளுக்கொரு பிளாஸ்டிக் குடங்களையோ, சில்வர் அல்லது பித்தளை பாத்திரங்களையோ வைத்துக்கொண்டு மக்கள் வரிசையில் நிற்பதுண்டு.
அவ்வாறு வரிசையில் நிற்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தெப்பள சுந்தராம்மாளுக்கும், பத்மாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாற, இருவரும் தாங்கள் கொண்டுவந்திருந்த பாத்திரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதனால் பத்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சுந்தராம்மாள் மீது வழக்குப் பதிவு செய்து இவ்வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.