'என்ன லவ் பண்ணிட்டு..'.. 'இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'.. ராணுவ வீரரின் வெறிச்செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 25, 2019 04:58 PM

திருவனந்தபுரம் அருகே காதலிக்க மறுத்த இளம் பெண்ணைக் கொன்று, அந்த பெண்ணின் உடலை ஆடைகளின்றி நிர்வாணமாக, ராணுவ வீரர் ஒருவர் புதைத்துள்ள சம்பவம் கேரளாவில் கிடுகிடுக்க வைத்துள்ளது.

army man kills young Kerala woman and buried in his plot

எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தவர் ராக்கிமோள் இளம் பெண். திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை பக்கம் உள்ள பூவார் புத்தன் கடையைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகளான இவர், கடந்த ஜூன் 21- ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்குச் சென்ற இந்த பெண் காணாமல் போனதாக இவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து, ராக்கிமோளின் செல்போன் உரையாடல், சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீஸார் விசாரித்ததில் ராக்கிக்கு ஒரு காதலன் இருந்துள்ளதும், ராக்கியின் காதலன் ராக்கியை, தன் வீட்டுப் பின்புறத்தில் கொன்று, புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ராக்கியின் காதலனின் நண்பனான ஆதர்ஷை போலீஸார் விசாரித்தனர்.

அப்போதுதான் ராக்கியின் உறவுக்காரரும், ராணுவத்தில் பணிபுரிபவருமான அகில் ராக்கியை காதலித்து ஏமாற்றிவிட்டு, ராக்கிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யவிருப்பதை தெரிந்துகொண்ட ராக்கி, அகிலுக்கு போன் செய்ததையும், அகில் போனை எடுக்காததால் ராக்கி அகிலின் வீட்டுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

அதன் பிறகு, அகில் மீது, தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டிய ராக்கிக்கும் அகிலுக்கும் நடந்த வாக்குவாதம் முற்றியதால், அகில் ராக்கியை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் தனது தம்பி ராகுல் மற்றும் நண்பர் ஆதர்ஷின் உதவியோடு ராக்கியை தன் வீட்டுப் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்தில் நிர்வாணமாக புதைத்து, அந்த மண் மீது செடியை நட்டுவைத்துவிட்டு டெல்லிக்கு சென்றதும் தெரியவந்தது.

அதன் பின்னர், ராக்கியின் பூதவுடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராக்கியின் இந்த நிலையைத் தாங்காமல் அவரது பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து, டெல்லியில் ராணுவத்தில் பணிபுரியும் அகிலை, கேரளாவுக்கு கொண்டுவந்து, கைது செய்து போலீஸார் விசாரிக்கவுள்ளதாக தெரிகிறது.

Tags : #KERALA #MURDER #GIRL #ARMYMAN #LOVE #BIZARRE