'அமைதியாய் நடந்த உணவுத் திருவிழா'.. துப்பாக்கியுடன் வந்த நபர்.. உலகையே உலுக்கியுள்ள சம்பவம்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Jul 29, 2019 11:44 AM
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில், உணவுத் திருவிழாவின் போது நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதும், 12 பேர் படுகாயமடைந்ததும் உலகை உலுக்கியுள்ள சம்பவமாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவில் நடந்துவரும் கில்ராய் உணவுத் திருவிழாவில், அமெரிக்க நேரப்படி மாலை 5.30 மணிக்கு அனைவரும் கூடியுள்ளனர். அங்கு ராணுவ உடையில் அப்போது வந்த நபர் ஒருவர் திடீரென தன் துப்பாக்கியை எடுத்து மக்களை நோக்கி சுடத் தொடங்கியுள்ளார்.
இதனால் அலறுத் துடித்துக்கொண்டு அங்கும், இங்கும் தாறுமாறாக மக்கள் பெருக்கெடுத்து ஓடியுள்ளனர். இந்த காட்சி வீடியோவாக இணையதளத்தில் பரவி வருவதோடு, உலகையே பதற்றத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளதாகவும், இதுபற்றி விசாரணை நடத்துவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
yo somebody was shooting at the gilroy garlic festival. be safe pic.twitter.com/B39ZIYe8wr
— niah ㊝ (@wavyia) July 29, 2019
