'ஐ.பி.எல் போட்டிகள் வேணாம்'.. அதே 'எனர்ஜி'ய இங்க காட்டுங்க.... இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறும் 'கபில் தேவ்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Feb 28, 2020 02:34 PM

இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர் போட்டிகளால் அதிக நெருக்கடி ஏற்படுமெனில் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Former Captain Kapil Dev advised Indian players to skip Ipl

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து முதலில் நடைபெற்ற டி 20 தொடரை 5 - 0 என வெற்றி பெற்றிருந்த நிலையில் ஒரு நாள் போட்டி தொடரை ௦ - 3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும்  நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக இல்லாததால் தோல்வியடைந்தோம் என அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

ஐ.பி.எல் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்திய அணி வீரர்கள் அதிக நெருக்கடியுடன் தொடர்ச்சியாக ஆடி வரும் நிலையுள்ளதால் வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் ஒய்வு எடுத்துக் கொள்வது நல்லது. இந்திய வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடும் போது தங்களது முழு உத்வேகத்தையும்  அளிக்கின்றனர். அதை விட சிறந்த ஆட்டத்தை தங்களது தேசிய அணிக்காக ஆடும் போதும் எந்த வித சமரசமும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #KAPIL DEV #VIRAT KOHLI #IND VS NZ #IPL 2020