‘இன்னும் இரண்டு நாள் மட்டும் கொஞ்சம் பாத்து இருங்க..’ செய்தி வெளியிட்டுள்ள வானிலை மையம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 19, 2019 07:29 PM

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதியுடன் கத்தரி வெயில் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்கிறது.

weather report heavy rain alert to Tamilnadu from 21st

தினந்தோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்றால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் வானிலை மையம் ஆறுதலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்  வரும் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் கூறியிருந்தது. பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 3-4 நாட்களுக்கு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்குக் குறையும். குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறையும். 21ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கும். தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததும் படிப்படியாக வெப்பம் குறையும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #WEATHER #HEAVYRAIN