இந்திய அணியின் 'முக்கிய' வீரர் திடீர் விலகல்... யாரை எடுக்குறது?... தலையை பிய்த்துக் கொள்ளும் தேர்வுக்குழு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 21, 2020 04:20 PM

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய கையோடு இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு தலா 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

Shikhar Dhawan ruled out of the T20 series? details here

இந்த நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் டி20 தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும்போது தவானின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் 3-வது போட்டியில் அவர் களமிறங்கவில்லை.

இதற்கிடையில் ஷிகர் தவான், ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா என அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்ததால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக யாரை அறிவிப்பது? என்பது குறித்து தேர்வுக்குழுவினர் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.