‘மலையில் இருந்து வீசி கொலை’.. பிஞ்சு குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்..! நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 15, 2020 08:18 PM

பெற்ற குழந்தைகளை மலையில் இருந்து தள்ளி கொலை செய்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Father killed his own son and daughter at hills in Namakkal

நாமக்கல் மாவட்டம் அரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சிரஞ்சீவி-பாக்கியம் தம்பதியினர். இவர்களுக்கு கிரிதாஸ் (8), கவிதாராணி (5) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் மனைவி பாக்கியத்துடன் சிரஞ்சீவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நவம்பர் மாதம் செம்மேடு சீக்குபாறை பகுதியில் உள்ள ‘வியூ பாயிண்ட்’ மீது ஏறி தனது இரு குழந்தைகளையும் சுமார் 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.

இதனிடையே கணவர் மீது சந்தேகமடைந்த பாக்கியம், குழந்தைகளை காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சிரஞ்சீவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது குழந்தைகளை மலையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிரஞ்சீவி அளித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்களின் உதவியுடன் இரு குழந்தைகளின் சடலங்களை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிரஞ்சீவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை தந்தையே மலையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #FATHER #DAUGHTER #SON #NAMAKKAL