'நிர்வாண சிலைகளைக் காட்டி'.. 'வகுப்பறையில் கணித ஆசிரியரின் செயலால்'.. அதிர்ந்த மாணவிகளின் பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 16, 2019 08:00 PM

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கொங்கலம்மன் கோவில் அரசுப்பள்ளியில், மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக கணித ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Govt Teacher arrested under pocso after parents complaint

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த 37 வயதான கணித ஆசிரியர் சுரேஷ் அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். 50 மாணவர்கள் பயின்றுவரும் இப்பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக அம்மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

நிர்வாண சிலைகளின் படங்களை காட்டியும், மனித உடல் உறுப்புகள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆபாசமான வார்த்தைகளுடன் ஆசிரியர் சுரேஷ் விளக்குவார் என்றும் அம்மாணவிகளுள் சிலர் குறிப்பிட்டுள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மாணவிகளை தொட்டு பேசுவதாகவும், பாலியல் தொந்தரவு தருவதாகவும் கடிதமாக எழுதி வட்டார கல்வி அலுவலரிடமும், மாவட்ட கல்வி அலுவலரிடமும் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, ஆசிரியர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டார். மேலும் மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் சுரேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Tags : #SEXUALABUSE #SCHOOLSTUDENT #NAMAKKAL #TEACHER #RASIPURAM