'கூட்டு பலாத்காரம் செய்து.. வீடியோ எடுத்து.. மிரட்டி'..'திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 13, 2019 08:09 PM

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்யும் நபர் ஒருவரின் 2வது மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது.

psycho gang assaults married girl in chennai virugambakam

முதல் மனைவியின் பிள்ளைகளையும், தனது 25 வயது 2வது மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு, தச்சு வேலைக்காக சென்றிருக்கிறார் அந்த நபர். அப்போது அந்த வீட்டருகே கோவில் திருவிழா ஒன்று விமரிசையாக நடைபெற்றது.  அந்த இரவு நேரத்தில், அப்பெண் வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்துள்ளார்.

அவரிடம் வந்த ஹரிஷ் குமார் மற்றும் ரமேஷ் குமார் இருவரும் கோவில் பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அப்பெண் வீட்டருகே மயங்கி விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும், கவனிக்காத நிலையில், அப்பெண்ணை வீட்டுக்குள் கொண்டு சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்துமுள்ளனர் அந்த கும்பல்.

பிறகு அப்பெண் அணிந்திருந்த 3 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர். மேலும் வீடியோவை அப்பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டியுள்ளனர். அப்போது அப்பெண் நகையையாவது திருப்பித்தரச் சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைத்த அந்த கும்பல் அப்பெண்ணை மேலும் சில நண்பர்களுடன் இணங்க வற்புறுத்தியது. இல்லையென்றால் வீடியோவை வெளியே விட்டுவிடுவதாய்ச் சொல்லி மிரட்டியுள்ளது.

மேலும் நகைக்காக அம்பத்தூர், நெசப்பாக்கம் என அலையவிட்டு அங்கங்கே இருந்த நண்பர்களை விட்டும் பலாத்காரம் செய்துள்ளது அந்த சைகோ கும்பல். அதன் பின்னர் வெளியூரில் இருந்து வந்த கணவர் நகை பற்றி கேட்டபோது, அப்பெண் உண்மையைக் கூறி அழுதுள்ளார். வீடியோவையும் காண்பித்துள்ளார். அதன் பின்னர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் நகைக்கான பணத்தை திருப்பித்தரும்படி அந்த நபர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து அப்பெண்ணின் வீட்டருகே சுற்றிக்கொண்டிருந்த அந்த கும்பல், அப்பெண்ணுக்கு கொடுத்த தொடர் மிரட்டலால் பயந்து அவர் 3 முறை தற்கோலைக்கு முயன்றதை அடுத்து, அந்த கும்பல் மீது மிரட்டி வீடியோ எடுத்தல், தாக்குதல், கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வடபழனி மகளிர் காவல் நிலையம், இந்த சைகோ கும்பலை தேடி வருகிறது.

Tags : #SEXUALABUSE #CHENNAI #CASE