‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் நண்பர்களுக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 19, 2019 03:56 PM

தெலுங்கானாவில் நாகார்ஜுன சாகர் கால்வாயில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்த கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

Telangana Accident 6 missing after car crashed into canal

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 11 பேர் நேற்று இரவு சூர்யா பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு 2 கார்களில் திரும்பியுள்ளனர். அவர்கள் சக்கிராலா அருகே சென்றுகொண்டிருந்தபோது முதலில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த நாகர்ஜுன சாகர் கால்வாயில் விழுந்துள்ளது.

கால்வாயில் நீரின் வேகம் அதிக அளவில் இருந்ததால் விழுந்ததும் கார் அப்படியே அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு காரில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காருடன் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் தேடுவதில் சிக்கல் இருந்த நிலையில், இன்று காலை முதல் சூர்யா பேட்டை கலெக்டர் அமய்குமார் மற்றும் எம்எல்ஏ மல்லய்யா ஆகியோர் தலைமையில் காணாமல் போன 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : #TELANGANA #ACCIDENT #CAR #CRASH #CANAL #NAGARJUNASAGAR #DAM #MARRIAGE #FRIENDS