யாரு சாமி இவங்க?.. 500 பைக், 250 டிராக்டர், 21 கார்.. ஒரே நாள்ல '30 கோடி' ரூபாய்க்கு.. வாங்குன விவசாயிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 16, 2019 02:33 PM

நாடு முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றன. இந்தநிலையில் ஒரே நாளில் சுமார் 30 கோடி ரூபாய்க்கு வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றன.

Onion Farmers from Kalwan Buying 250 Tractors in a Single Day

மகாராஷ்டிரா மாநிலம் அருகேயுள்ள கல்வான் என்னும் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வெங்காய விளைச்சல் நன்கு லாபம் கொடுத்துள்ளது. திடீரென வெங்காய விலை உயர்ந்ததால் இப்பகுதி மக்கள் நன்கு சம்பாதித்து உள்ளனர். இதனையடுத்து, நவராத்திரி காலத்தில் ஒரே நாளில் 250 ட்ராக்டர்கள், 500 இருசக்கர வாகனங்கள், 21 கார்கள் என ஒரே நாளில் இந்த ஊர் மக்கள் வாங்கியுள்ளனர்.

இதனால் கல்வான் நகரத்தில் உள்ள அத்தனை ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மனமகிழ்ந்து, அனைத்து நிறுவனங்களின் தலைமைகளும் இணைந்து இந்த ஊருக்குப் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

Tags : #AUTOMOBILE #CAR