மாதம்தோறும் குலுக்கல்... 'முதல்' பரிசு ரூபாய் 1 கோடி... 'லாட்டரியைக்' கையிலெடுக்கும் மத்திய அரசு?... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாவிரைவில் மத்திய அரசு லாட்டரி டிக்கெட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி) வரி அமல்படுத்தப்பட்டது. இதன்கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5%, 12%, 18% மற்றும் 28% வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவைகளில் மக்கள் பில்களை வாங்குவதன் வழியாக ஜி.எஸ்.டி வரி வசூலாகிறது.
எனினும் நாடு முழுவதும் உள்ள மக்கள் பொருட்களை வாங்கிவிட்டு அதற்குரிய பில்களை வாங்க மறந்து விடுகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு ஏகப்பட்ட வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு விரைவில் லாட்டரி முறையை மத்திய அரசு கையிலெடுக்க இருக்கிறதாம்.
இதனால் மக்கள் பொருட்கள் வாங்கும்போது பில்களையும் சேர்த்து வாங்குவார்கள் என மத்திய அரசு கருதுகிறதாம். ஜி.எஸ்.டி லாட்டரி திட்டம் என்ற பெயரில் அறிமுகமாவுள்ள இந்த லாட்டரி சீட்டு முறையில் மாதம்தோறும் வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 1 கோடி வரை பரிசு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்படி, பொருட்கள் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்கள், மத்திய அரசு அறிவிக்கும் லாட்டரி சீட்டின் வலைத்தளத்தில் தங்கள் ரசீதை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மாதந்தோறும் குலுக்கல் முறையில், வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
