'ஆள்நடமாட்டம்' இல்லாத இடத்தில் கிடந்த '9 வயது' சிறுமி... 'மதுபோதையில்' கும்பல் செய்த 'வெறிச்செயல்'... 'உன்னாவ்' பகுதியில் மீண்டும் ஒரு 'பாலியல்' குற்றம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 12, 2020 12:42 PM

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் மீண்டும் ஒரு பாலியல் வன்புணர்வு சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு 9 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

9-year-old girl sexually abused in U.P- a rape again in unnao

சில வருடங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பெண் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்ற வழியில் அந்த ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைத்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர்  பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அந்த சிறுமி ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை காண வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில்  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.

உடற்கூறு ஆய்வில் சிறுமியை கடத்திய மர்மநபர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

சிறுமி கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் கிடந்தன. எனவே மதுபோதையில் கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார்  வழக்குபதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags : #UTTARPRADESH #UNNAO #SEXUAL HARRASMENT #MINOR GIRL